நண்பன் விஷ்ணுவுக்கு கை கொடுத்த விஷால்!

நண்பன் விஷ்ணுவுக்கு கை கொடுத்த விஷால்!

செய்திகள் 3-Sep-2014 5:47 PM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வரும் படம் ‘ஜீவா’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை ‘வெண்ணிலா கபடி குழு டீம்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூரியும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைப்பில் உருவான ‘ஜீவா’ படத்தின் பாடல்கள் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பின் மூலம் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்கி, நடிகர் விஷால் தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் மூலம் வெளியிடவிருக்கிறார். இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

விஷ்ணுவும் விஷாலும் நீண்ட நாட்களாக இணை பிரியாத நண்பர்களாக இருந்து வருவது கோலிவுட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த விஷயம். பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் விஷ்ணுவின் சினிமா கேரியரிலும் அக்கறை கொண்ட விஷால் தற்போது தனது நிறுவனம் ‘ஜீவா’ படத்தை வெளியிடுவதன் மூலம் தன் நட்பை வெளிப்படுத்தியிருப்பதாக சினிமா ஆர்வலர்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;