‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ காட்டவிருக்கும் லாரன்ஸ்!

‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ காட்டவிருக்கும் லாரன்ஸ்!

செய்திகள் 3-Sep-2014 4:49 PM IST VRC கருத்துக்கள்

‘முனி’யின் மூன்றாம் பாகமான ‘கங்கா’ படத்தில் தற்போது பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தைத் தொடர்ந்து வித்தியாசமான முயற்சி ஒன்றை கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்த இருக்கிறார் அவர். அதாவது, ஒரு சினிமாவுக்குள் இடைவேளைக்கு முன்பு ஒரு படம், இடைவேளைக்குப் பிறகு ஒரு படம் என ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரப்போகிறாராம். இந்தப் படத்திற்கு ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்ற டைட்டிலை அவர் வைத்திருக்கிறார். அதில் இடைவேளைக்கு முன்பு வரும் படத்திற்கு ‘கிழவன்’ என்றும், இடைவேளைக்குப் பிறகு வரும் படத்திற்கு ‘கருப்புதுரை’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுக்குமே கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ‘கிழவன்’ படத்தின் நாயகியாக ஆன்ட்ரியாவும், ‘கருப்புதுரை’ படத்தின் நாயகியாக ராய் லக்ஷ்மியும் நடிக்க இருக்கிறார்கள். ‘கிழவன்’ படத்திற்கு இசையமைப்பாளராக லியோன் என்பவரை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ‘கருப்புதுரை’க்கான இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை பாடலாசிரியராக இருந்து வந்த கவிஞர் விவேகா, இந்த இரண்டு படங்களுக்குமே வசனம் எழுதவிருக்கிறார்.

ஏற்கெனவே 1990ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு வீடு இரு வாசல்’ என்ற திரைப்படமும் கிட்டதட்ட இதேபோன்றதொரு பாணியில் உருவாக்கப்பட்ட படம்தான். ஆனால், இப்படத்தின் க்ளைமேக்ஸில் இரண்டு கதைகளுக்குமான தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் பாலசந்தர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;