‘செல்ஃபி’காக லண்டன் பறக்கும் விஜய், சமந்தா!

‘செல்ஃபி’காக லண்டன் பறக்கும் விஜய், சமந்தா!

செய்திகள் 3-Sep-2014 3:23 PM IST Chandru கருத்துக்கள்

அனிருத் இசையமைக்கும் ‘கத்தி’ படத்திற்காக நேற்று ‘செல்ஃபி புள்ள...’ என்ற பாடலை விஜய் பாடினார். இப்படத்தில் எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கும் சமந்தாவை, ஹீரோ விஜய் புகழ்ந்து பாடுவதால் இப்பாடல் உருவாக்கப்பட இருக்கிறதாம். இந்த பெப்பியான பாடலை 1 மணி நேரத்திலேயே சூப்பராக பாடி முடித்துவிட்டாராம் விஜய். கேட்பதற்கு மிக இனிமையாக வந்துள்ள இந்தப் பாடல் சூப்பர்ஹிட்டாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதால், இப்பாடலுக்காக பிரம்மாண்ட காட்சிகளை அமைக்க முடிவு செய்திருக்கிறதாம் ‘கத்தி’ குழு. இதனால் இந்தப் பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடித்து வரலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். லண்டனில் உள்ள முக்கிய இடங்களில் படம்பிடிக்க உள்ள இந்தப்பாடலில் விஜய், சமந்தா இருவரும் கலந்து கொள்கிறார்களாம். இரண்டொரு நாளில் அனேகமாக இந்த டீம் லண்டன் பறக்கும் என்கிறார்கள்.

‘துப்பாக்கி’யின் ‘கூகுள்... கூகுள்...’, ‘தலைவா’வின் ‘வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...’ ‘ஜில்லா’வின் ‘கண்டாங்கி...’ பாடலைத் தொடர்ந்து ‘கத்தி’யின் இந்த ‘செல்ஃபி புள்ள...’ பாடலும் சூப்பர்ஹிட் ஆகுமாம். ‘கத்தி’ படத்தின் ஆடியோவை செப்டம்பர் 18ஆம் தேதியும், படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;