‘கத்தி’ ஆடியோ விழா செப்டம்பர் 18ல் உறுதி!

‘கத்தி’ ஆடியோ விழா செப்டம்பர் 18ல் உறுதி!

செய்திகள் 3-Sep-2014 1:59 PM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் சில இயக்கங்களால் எதிர்ப்பு, இன்னொருபுறம் கதை உரிமை கோரி வழக்கு என தேவையில்லாத பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தாலும், ‘கத்தி’ படத்தின் வேலைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதவாறு பிஸியாக சுழன்று கொண்டிருக்கிறது இயக்குனர் ஏ.ஆர்.முருகாதஸின் டீம்! இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் நேற்று ‘கத்தி’ படத்திற்காக ‘செல்ஃபி புள்ள...’ என்ற பாடலையும் பாடி முடித்திருக்கிறார் விஜய். இப்பாடலோடு இந்த ஆல்பத்தின் எல்லா பாடல்களும் ரெடி! தவிர, கதை உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் விளக்கங்களை தெரிவாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இவ்வழக்கிற்கான தீர்ப்பு செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றையும் தாண்டி ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை கண்டிப்பாக வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ‘கத்தி’யின் தயாரிப்பு நிறுவனங்களான லைகா புரொடக்ஷனும், ஐயங்கரன் நிறுவனமும். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ‘கத்தி’ டீமில் உள்ள அனைவரிடமும் கலந்தாலேசித்தார்களாம். அனைவரும் ஏக மனதாக செப்டம்பர் 18ல் நடத்திவிடலாம் எனக் கூறியதும், தற்போது அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறதாம். எங்கே நடத்துவது? யார் யாரை அழைப்பது? என்பதை இறுதி முடிவு செய்ததும் ‘கத்தி’ இசை வெளியீட்டு விழா செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;