2014ன் மோஸ்ட் வான்டட் ஹீரோ!

2014ன் மோஸ்ட் வான்டட் ஹீரோ!

செய்திகள் 3-Sep-2014 12:14 PM IST Chandru கருத்துக்கள்

தேசிய விருது வாங்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தால் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி, ‘பீட்சா’வின் பேய்த்தனமான வெற்றியால் இயக்குனர்களின் ஹீரோவாக உருவெடுத்தார். அதன்பிறகு வெளிவந்த ‘சூதுகவ்வும்’ படத்தில் 40 வயது கடத்தல்காரன் ‘தாஸா’க ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தார். ‘என்னாச்சு....’, ‘ப்ப்ப்....பா...ஆ’ போன்ற சாதாரண வார்த்தைகள்கூட விஜய் சேதுபதியின் வாயிலிருந்து வந்தபோது அனைவராலும் வசீகரிப்பட்டது.

இந்த 2014ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டன. அதோடு ‘ஜிகர்தண்டா’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ போன்ற படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தும் அசத்தினார். இவர் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் இன்னொரு படமான ‘திருடன் போலீஸ்’ விரைவில் வெளிவரவிருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்னும் 7 படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதில் சில படங்கள் இந்த வருடத்திற்குள் வரிசையாக வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘வன்மம்’, ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘புறம்போக்கு’, ‘வசந்தகுமாரன்’, ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. இதில் ‘வன்மம்’ படத்தின் வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மற்ற படங்களும் பாதிக்கும் மேல் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இந்தப் படங்கள் இல்லாமல் ‘சூது கவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆக, இந்த 2014ன் மோஸ்ட் வான்டட் ஹீரோ சந்தேகமேயில்லாமல் நம்ம விஜய் சேதுபதிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;