‘தல 55’ படத்தால் சந்தோஷத்தில் மிதக்கும் த்ரிஷா!

‘தல 55’ படத்தால் சந்தோஷத்தில் மிதக்கும் த்ரிஷா!

செய்திகள் 3-Sep-2014 11:48 AM IST Chandru கருத்துக்கள்

விநாயகர் சதுர்த்தி அன்று ‘தல55’ படத்தின் புதிய புகைப்படங்கள் சில வெளியாகின. இதில் அஜித்தின் புதுவிதமான தோற்றமும், கூடவே த்ரிஷாவின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அன்றைய தினம் இணையதளங்கள் முழுக்க இந்த புகைப்படங்கள்தான் எங்கெங்கு காணிணும் தென்பட்டன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்களும், அவரின் தோழிகளும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க தற்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இது குறித்த தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘‘தல 55 புகைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் ஏகப்பட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். நன்றி கௌதம் ஜி!’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;