விஜய் சேதுபதி, கிருஷ்ணா மோதல்!

விஜய் சேதுபதி, கிருஷ்ணா மோதல்!

செய்திகள் 3-Sep-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘‘உயிருக்கு உயிரான நண்பர்களை போன்று இருப்பவர்கள் விஜய் சேதுபதியும், கிருஷ்ணாவும். இவர்களுள் ஒருவர் பேசும் ஒரு வார்த்தை இருவருக்குள்ளும் பெரும் மோதலை உருவாக்குகிறது. இதனால் ஒருவருக்கொருவர் உயிரை எடுக்கவே துணிகிறார்கள். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், திருப்பங்களும் தான் 'வன்மம்’ படம்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஜெய்கிருஷ்ணா.

இப்படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஹீரோயினாக சுனைனா நடித்திருக்கிறார். நேமிச்சந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

நாகர்கோவில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் எல்லோரும் நாகர்கோவில் ஸ்லாங் தமிழ் பேசி நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் ஜெய்கிருஷ்ணாவுக்கு 25 வருட காலப் போராட்டத்திற்கு பிறகு இயக்க வாய்ப்பு கிடைத்த படமாம் இது!. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;