நார்வேயில் நலமுடன் சிவகார்த்திகேயன்!

நார்வேயில் நலமுடன் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 2-Sep-2014 4:54 PM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயனுக்கு படப்பிடிப்புத்தளத்தில் அடிபட்டுவிட்டதாக இன்று காலையிலிருந்து ட்விட்டரில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது உண்மையல்ல என மறைமுகமாக சொல்லும்விதத்தில் ட்வீட் செய்துள்ளார் அவர். அதில், ‘‘நான் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக நார்வேயில் இருக்கிறேன். அனிருத் சாரின் மியூசிக்கிற்கு ஏற்றவகையில் ஆட முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்!’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பிரபு, வித்யூலேகா ராமன், மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கும் ‘காக்கிச் சட்டை’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;