விரைவில் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விரைவில் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 2-Sep-2014 4:31 PM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த 6வது படத்திற்கும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவே தொடர்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரப்போவதாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இந்த வித்தியாசமான கூட்டணி மூலம் உருவாகிவரும் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காண்பதற்காக சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;