‘கத்தி’க்காக விஜய் பாடிய ‘செஃல்பிபுள்ள...’

‘கத்தி’க்காக விஜய் பாடிய ‘செஃல்பிபுள்ள...’

செய்திகள் 2-Sep-2014 3:55 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் ஏற்கெனவே 5 பாடல்கள் ரெடி. ஒரேயொரு பாடலை விஜய் பாட வேண்டியிருந்தது. அந்தப் பாடலும் இன்று காலையில் அனிருத் இசையமைக்க, படத்தின் நாயகன் விஜய் பாடி முடித்துவிட்டார். ‘செல்ஃபிபுள்ள’ எனத் தொடங்கும் இப்பாடலுக்கான ஷூட்டிங் மட்டுமே இன்னும் மீதமிருக்கிறது. இதுவும் முடிந்துவிட்டால் ‘கத்தி’ படத்தின் டப்பிங் வேலைகள் மட்டுமே உள்ளன. அதுவும் முதல் பாதி டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், இரண்டாம்பாதி டப்பிங் வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தீபாவளி ரேஸுக்கு வெகு ஜோராக தயாராகிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;