ஷங்கருக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா?

ஷங்கருக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா?

செய்திகள் 2-Sep-2014 3:08 PM IST Chandru கருத்துக்கள்

மகேஷ் பாபு, தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆகடு’ தெலுங்குப் படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ‘ஐ’ பட இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ஆகடு படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கு இது 50வது படம். என்னுடைய ‘பாய்ஸ்’ படத்தில் நடிக்க வைத்ததுக்கு காரணமே அவர் சிறந்த டிரம்ஸ் பிளேயர் என்பதால்தான். படத்திலும் அவருக்கு அந்த கேரக்டர்தான் கொடுத்திருந்தேன். அவருடைய படங்களின் பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பிடிக்கும். இந்த ‘ஆகடு’ படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். நான் நடிகர் பிரம்மானந்தத்தின் பெரிய ரசிகன். அவருடைய காமெடிகளை பெரிதும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். மகேஷ்பாபுவின் ‘தூக்குடு’ படத்தில்கூட அவருடைய காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை நான் எங்காவது சொல்ல வேண்டும் என ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;