விக்ரமின் ‘டேவிட்’ ஸ்டைலில் லாரன்ஸின் ‘கங்கா’

விக்ரமின் ‘டேவிட்’ ஸ்டைலில் லாரன்ஸின் ‘கங்கா’

செய்திகள் 2-Sep-2014 12:15 PM IST Top 10 கருத்துக்கள்

விக்ரம், ஜீவா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘டேவிட்’ படத்தில் வித்தியாசமாக ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இசையமைப்பாளரை இசையமைக்க வைத்திருந்தார்கள். அதில் ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதே ஸ்டைலை ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமான ‘கங்கா’வுக்கும் பயன்படுத்த இருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் ராகவா லாரன்ஸ். இப்படத்திற்கு தேவைப்படும் 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்களைக் கொண்டு உருவாக்கவிருக்கிறாராம். தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தை டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் லாரன்ஸ்.

லாரன்ஸ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் டாப்ஸி, கோவை சரளா, தேவதர்ஷினி, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு பின்னணி இசையை எஸ்.எஸ்.தமன் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;