விஜய், சூர்யாவுக்கு மம்முட்டி விட்ட சவால்!

விஜய், சூர்யாவுக்கு மம்முட்டி விட்ட சவால்!

செய்திகள் 2-Sep-2014 12:04 PM IST Chandru கருத்துக்கள்

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் தமிழ் ஹீரோக்களான விஜய், சூர்யா ஆகியோருக்கும் ஒரு சூப்பர் சவால் ஒன்றை விடுத்திருக்கிறார். சமீபகாலமாக உலகம் முழுவதும் ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ பரவலாக எல்லோராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை மனதில் வைத்து, நடிகர் மம்முட்டியும் ‘மை ட்ரீ சேலஞ்ச்’ எனும் விஷயத்தை துவக்கி வைத்திருக்கிறார். அதாவது மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து, அதைப்போல இருவரை மரக்கன்று நடுவதற்கு சவால் விடுவதுதான் இந்த ‘மை ட்ரீ சேலஞ்ச்’ ஆகும். இதுகுறித்து அவர் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

‘‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச் உலகம் முழுக்க பிரபலமாகியுள்ளது. இதைப்போல நானும் ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்பதை துவக்கியிருக்கிறேன். இந்த சவாலில் என்னுடைய சக சினிமா நடிகர்கள் மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரும் பங்குகொண்டு இந்த உலகத்தை பசுமையாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சவாலை ஹிந்தி நடிகர் ஷாருக்கான், தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்கு நான் விடுக்கிறேன். அவர்கள் இதில் பங்குகொண்டு பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.’’ எனக்கூறியிருக்கிறார் மம்முட்டி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;