‘கத்தி’ கதை உரிமை வழக்கு : ஏ.ஆர்.முருகதாஸ் பதில் மனு

‘கத்தி’ கதை உரிமை வழக்கு : ஏ.ஆர்.முருகதாஸ் பதில் மனு

செய்திகள் 2-Sep-2014 11:43 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை மீது உரிமை கோரி கோபி என்பவர் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸிடம் தன்னுடைய கதையை பலமுறை சொல்லியிருப்பதாகவும், அந்தக் கதையை வேறொரு பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கி வருவதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் அவர் தன்னுடைய மனுவில் குறுப்பிட்டிருந்தாராம். இந்நிலையில் இந்த வழக்கிற்கு எதிராக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறாராம். அந்த மனுவில்,

‘‘மனுதாரர் கோபி என்ற நயினார் என்பவரை எனக்கு யார் என்றே தெரியாது. அவரை இதுநாள் வரை பார்த்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது. அவரிடம் கதை எதுவும் கேட்கவில்லை. அவரது கதையைத்தான் நான் படமாக எடுக்கிறேன் என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மேலும், இந்த விவகாரத்தில் வக்கீல் கமிஷன் மூலம் விசாரணை நடத்துவது என்பது சரியானதாக இருக்காது. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக உள்ளேன். கடின உழைப்பினால் முன்னேறிய எனக்கு சினிமாத்துறையில் நற்பெயர் உள்ளது. தற்போது, முன்னணி நடிகரான விஜயை வைத்து படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் வெளிவருவதற்கு முன்பு, படத்தின் கதையை வக்கீல் கமிஷனிடம் கொடுப்பது என்பது சரியாக வராது. எனவே, வக்கீல் கமிஷன் அமைத்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருப்பதாக இன்றை நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;