‘அமர காவியம்’ க்ளைமேக்ஸில் ‘பகீர்’ நிஜ சம்பவம்!

‘அமர காவியம்’ க்ளைமேக்ஸில் ‘பகீர்’ நிஜ சம்பவம்!

செய்திகள் 2-Sep-2014 11:09 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் ‘அமர காவியம்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். ‘நான்’ பட இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தை தனது ‘ஷோ பீப்பிள்’ நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் ஆர்யா.

இப்படத்தின் க்ளைமேக்ஸ், பார்ப்பவர்களின் மனதை பதை பதைக்க வைக்குமாம். இந்தக் காட்சியை 1982ல் நடந்த, தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனார் ஜீவா ஷங்கர். இப்படம் 80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். இன்டர்நெட், செல்போன் என எந்தவித டெக்னாலஜியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் நடக்கும் உருக்கமான காதல் கதையை ‘அமர காவியம்’ படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;