விஜய் படத்திலிருப்பதை உறுதிசெய்த ஸ்ருதிஹாசன்!

விஜய் படத்திலிருப்பதை உறுதிசெய்த ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 2-Sep-2014 9:34 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது ‘கத்தி’ படத்தின் டப்பிங் பணிகளில் விஜய்யும், ‘பூஜை’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஸ்ருதிஹாசனும் செம பிஸியாக இயங்கி வருகிறார்கள். இப்படங்களைத் தொடர்ந்து இருவரும் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, ஒரு சில நாட்களாக பல இணையதளங்களிலும் ஸ்ருதிஹாசன், விஜய் படத்திலிருந்து விலகிவிட்டார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஸ்ருதிஹாசன், ‘‘சிம்புதேவன் சார் படத்துல விஜய் சார்கூட சேர்ந்து நடிக்கிறதுக்காக நான் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டிருக்கேன். அப்படியாவது நான் சும்மா போலியாக போட்ட ட்வீட்டுக்கான யூகங்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

ஸ்ருதி இப்படி சொல்லியிருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு அவர், ‘‘நிறைய மாற்றங்கள் நடந்துருச்சு. இனிமே பெரிசா எதுவுமில்லை. இது எல்லாம் நடந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. கண்டுபிடிங்க பார்க்கலாம்’’ என ட்வீட் போட்டிருந்தார். அதை தவறாகப் புரிந்துகொண்டு பல இணையதளங்களிலும் ஸ்ருதிஹாசன், விஜய் & சிம்புதேவன் படத்திலிருந்து விலகிவிட்டார் என செய்திகளை வெளியிடத் தொடங்கின. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;