ஜீவா ரசிகர்களின் 10 மாத காத்திருப்பு!

ஜீவா ரசிகர்களின் 10 மாத காத்திருப்பு!

செய்திகள் 2-Sep-2014 9:16 AM IST Chandru கருத்துக்கள்

கடைசியாக ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் ‘என்றென்றும் புன்னகை’ (டிசம்பர் 20, 2013). அதன் பிறகு இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலில் மட்டும் தலைகாட்டிவிட்டுப் பறந்தார். அதன் பிறகு ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் ‘யான்’ படத்தில் நடித்தார் ஜீவா. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. பாடல்களும் 2 மாதங்களுக்கு முன்பே வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனாலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்டின் இன்னொரு படமான ‘யாமிருக்க பயமே’வை முதலில் ரிலீஸ் செய்தது என ‘யான்’ படத்தின் ரிலீஸ் கொஞ்சம் தள்ளியது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் வேலைகள் மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, நாளை (செப்டம்பர் 3) ‘யான்’ படத்தின் முழு நீள டிரைலரை வெளியிடுகிறார்கள். ஜீவா ரசிகர்களின் 10 மாத காத்திருப்புக்கு இந்த டீஸர் விருந்து படைக்கும் என நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;