சிம்பு - கௌதம் மேனன் படம் வருமா? வராதா?

சிம்பு - கௌதம் மேனன் படம் வருமா? வராதா?

செய்திகள் 1-Sep-2014 3:58 PM IST Chandru கருத்துக்கள்

அஜித் படத்திற்கு முன்பே சிம்பு படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனால், அஜித் படம் ‘புக்’ ஆனதும் அப்படத்தின் வேலைகளில் முழுவதும் பிஸியாகிவிட, சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன. இன்னொருபுறம் சிம்புவும் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ‘இது நம்மாளு படத்தில்’ தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சிம்பு - கௌதம் மேனன் படம் ‘டிராப்’ ஆனதாக பல இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி நாம் விசாரித்தபோது, ‘‘சிம்பு படத்தை கௌதம் கைவிடவில்லை. அஜித் படத்தை முதலில் முடித்துவிடுவதற்காக சிம்புவிடம் முறைப்படி சொல்லிவிட்டுத்தான் ‘தல 55’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் சிம்பு படத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வீணடிக்க யார் விரும்புவார்? அதோடு இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே எல்லா பாடல்களின் டியூன்களையும் போட்டுக் கொடுத்துவிட்டார். இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் போனால் போதும் படத்தை முடித்துவிடலாம். எனவே இந்த நிறுத்தம் தற்காலிகமானதுதான். அஜித் படம் முடிவடைந்ததும் சிம்பு படத்தின் வேலைகளில் கௌதம் மேனன் மீண்டும் பிஸியாகிவிடுவார்’’ என கௌதம் டீமிலிருந்த ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;