ஐரோப்பா பறக்கவிருக்கும் ‘லிங்கா’ டீம்!

ஐரோப்பா பறக்கவிருக்கும் ‘லிங்கா’ டீம்!

செய்திகள் 1-Sep-2014 3:14 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் கலக்கலான ஸ்டைலுடன், ’லிங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக், இரு தினங்களுக்கு முன் வெளியாகி ரஜினி ரசிகர்களை பரவசமடைய வைத்துள்ளது. ‘லிங்கா’வின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகாவில் படப்பிடிப்பை நடத்தி வரும் ‘லிங்கா’ படக் குழுவினர், விரைவில் இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா நாடுகளுக்கு பறக்கவிருக்கின்றனர். இந்தக் குழுவில் ரஜினிகாந்த், சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உட்பட பெரும் டீமே ஒன்று அங்கு செல்லவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைக்கும் ‘லிங்கா’ படம், ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரகி வருவதும், இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதும் எல்லோரும் அறிந்ததே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;