இதுவரை வெளிவராத ‘அஜித் 55’ ரகசியங்கள்...

இதுவரை வெளிவராத ‘அஜித் 55’ ரகசியங்கள்...

செய்திகள் 1-Sep-2014 12:11 PM IST Chandru கருத்துக்கள்

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான ‘அஜித் 55’ படத்தின் புதிய ஸ்டில்கள்தான் இப்போது இணையதளமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சில பல ஸ்டில்களுக்கே இந்த அளவு எதிர்பார்ப்பு என்றால்... படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ரிலீஸுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கும். இப்போது இப்படத்தைப் பற்றிய லேட்டஸ்ட்டாக பல விஷயங்கள் வெளிவந்துள்ளன. அவை....

* இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தாலும், அஜித் கேரக்டர் என்ன என்பது படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை ரசிகர்களுக்கு தெரியவே செய்யாதாம்.

* ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜித் செய்திருக்கும் கேரக்டரை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். அஜித் விரும்பினால் அந்த எல்லா படங்களிலும் அவரே நாயகனாகத் தொடர்வாராம்.

* இப்படத்தில் அஜித் 28 வயதிலிருந்து 35 வயது வரைக்குமான நான்கு கெட்அப்களில் வருகிறாராம். ஒவ்வொன்றிற்கும் சின்ன சின்ன வித்தியாசமான மேக்அப்களை பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

* சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைசெய்யும் 28 வயது மாடர்ன் யுவதியாக அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார்.

* இன்னொரு நாயகியாக நடிக்கும் த்ரிஷா இப்படத்தில் யாரைக் காதலிருக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.

* கௌதமுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஹாரிஸ் இப்படத்திற்காக 6 சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அதில்... ‘மழை வரப்போகுது துளிகளும் தூவுது நனையாமல் என்ன செய்வேன்...’’ என்ற பாடலை தாமரை எழுதியிருக்கிறார்.

* ‘மங்காத்தா’வின் பைக் சேஸ், ‘பில்லா 2’வின் ஹெலிகாப்டர் சாகஸம், ‘வீரம்’ படத்தின் ரயில் சண்டையைத் தொடர்ந்து இந்த ‘தல 55’யில் 120 அடி உயர கட்டடிடத்திலிருந்து கீழே இறங்கி வருவது போன்ற ஒரு காட்சியில் அஜித் டூப்பே போடாமல் நடித்து யூனிட்டை பிரமிக்க வைத்திருக்கிறாராம்.

* வட இந்தியாவின் ராணுவத்தளங்களின் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். விரைவில் இந்த இடங்களில் படப்பிடிப்பு துவங்குமாம்.

* இப்படத்தின் டைட்டிலை தீபாவளி வரை ரகசியமாகவே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம். ‘கத்தி’, ‘ஐ’ படங்களோடு திரையரங்குகளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. படம் 2015 பொங்கலுக்கு வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;