கமலின் ‘பாபநாச’த்தில் மோகன்லால் மகன்!

கமலின் ‘பாபநாச’த்தில் மோகன்லால் மகன்!

செய்திகள் 1-Sep-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதிலிருந்தே, சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ் எப்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்குவார் என்ற கேள்வி, மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மோகன்லால் நடித்த ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் பிரணவ்! இப்படத்தை தொடர்ந்து பெரிய ஒரு இயக்குனர் மூலம் பிரணவ் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிரபார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கர்கள்! ஆனால், பிரணவ் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மலையாள ‘திருசியம்’ படத்தின் ரீ-மேக் ஆன இப்படத்தை ‘திருசிய’த்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே தமிழிலும் இயக்க, அவருக்கு உதவி இயக்குனராகி இருக்கிறார் பிரணவ்! ‘பாபநாசம்’ படத்தை மோகன்லாலின் மைத்துனரும், பிரணவின் தாய் மாமாவுமான சுரேஷ் பாலாஜி மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;