தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள படம்!

தமிழுக்கு வரும் இன்னொரு மலையாள படம்!

செய்திகள் 1-Sep-2014 10:37 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக நிறைய மலையாள படங்கள் தமிழில் ரீ-மேக் ஆகி வருகிறது! ‘சென்னையில் ஒரு நாள்’, ‘அதிதி’ மற்றும் சில படங்களை தொடர்ந்து இப்போது கமல் நடிப்பில் ‘மலையாள’ திருசியம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. அடுத்ததாக மலையாள ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேஸ்’ உட்பட பல மலையாள படங்கள் ரீ-மேக் ஆக விருக்கிற நிலையில் இந்த லிஸ்டில் மற்றுமொரு படமும் இடம் பிடித்துள்ளது. அந்த படம் நிவின்போலி, இஷா தல்வர் ஜோடியாக நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’. வினீத் சீனிவாசன் இயக்கிய இப்படத்தை தமிழில் அறிமுக இயக்குனர் ஜவஹர் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதிதி


;