சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தமன்னா!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தமன்னா!

செய்திகள் 1-Sep-2014 10:25 AM IST VRC கருத்துக்கள்

‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ‘காவல்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்திற்கு அடுத்ததாக பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்! இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி இதில் லட்சுமி மேனன் நடிக்கவில்லையாம்! அவருக்கு பதிலாக இப்போது தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை இன்னும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘பையா’ படத்தில் தமன்னா நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;