‘முனி-3’ தாமதம் ஏன்? ரிலீஸ் எப்போது?

‘முனி-3’ தாமதம் ஏன்? ரிலீஸ் எப்போது?

செய்திகள் 1-Sep-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘முனி’, ‘காஞ்சனா’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘முனி-3’ கங்கா படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஒளிவீரன்.

‘கங்கா’ படம் பற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில்... ‘‘வருகிற 4ம் தேதி முதல் க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளன. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் தேவைப்படுகிறது. படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இடையில் சில மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். ‘காஞ்சனா’வைப் போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாங்கா - டிரைலர்


;