ரஜினி சாதனையை முறியடித்த விக்ரம்!

ரஜினி சாதனையை முறியடித்த விக்ரம்!

செய்திகள் 31-Aug-2014 10:10 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘ஐ’ எனும் பிரம்மாண்ட படம் தீபாவளியன்று ரிலீசாவது உறுதியாகி விட்டது. ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசான் முதலானோர் பங்கேற்க இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் 15-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது. இதுவரை கோலிவுட் திரையுலகம் கண்டிராத வகையில் மிகப்பிரம்மாண்டமாக இப்படம் கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில், அதிக பிரதிகளுடன் வெளியாகவிருக்கிற நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் விலைக்கு ஜெயா டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் தான் அதிக தொகைக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்ட (சுமார் 21 கோடி ரூபாய்) படமாக இருந்து வந்தது. இப்போது ரஜினியின் சாதனையை விக்ரம் முறியடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;