அஜித் 55-லும் தொடரும் ‘வீரம்’ சென்டிமென்ட்!

அஜித் 55-லும் தொடரும் ‘வீரம்’ சென்டிமென்ட்!

செய்திகள் 31-Aug-2014 9:43 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன், அஜித் முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று பல இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான தகவலையடுத்து, பெரும் ஆவலாய் காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் தல படத்தின் சில புகைப்படங்கள் நேற்று வெளியாக, அது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாய் அமைந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி தான் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். சென்ற பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த ‘வீரம்’ படம் ரிலீசானது. அதைப்போல வருகிற பொங்கலுக்கு அஜித்தின் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனராம் இப்படக் குழுவினர். ஆக, தல படத்தை காண, ரசிகர்கள் வருகிற பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;