ஜெயராம் மகனை ஹீரோவாக்கும் தமிழ் இயக்குனர்!

ஜெயராம் மகனை ஹீரோவாக்கும் தமிழ் இயக்குனர்!

செய்திகள் 30-Aug-2014 3:44 PM IST Top 10 கருத்துக்கள்

வித்தியாசமான கதை அமைப்பில், விஜய் சேதுபதி நடித்து பாலாஜி தரணிதரன் இயக்கிய படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இப்படம் எல்லா தரப்பினரையும் கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்திற்கு ‘ஒரு பக்க கதை’ என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கிறார். விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் துவக்க விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைக்க இருக்கிறார். காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சி.பிரேம்குமார், எடிட்டிங் செய்த ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் இப்படத்திலும் பணியாற்றவுள்ளனர். அறிமுகம் கோவிந்த மேனன் இசையமைக்கும் இப்படத்தை ‘ வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;