விஷால், ஹன்சிகாவுடன் இணையும் கிரண்!

விஷால், ஹன்சிகாவுடன் இணையும் கிரண்!

செய்திகள் 30-Aug-2014 3:06 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி., விஷால் இணைந்த ’மதகஜராஜா’ இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும், அடுத்ததாக ‘ஆம்பள’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார்கள் இருவரும்! தற்போது தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் மூலம் ‘பூஜை’ படத்தை தயாரித்து, நடித்து வரும் விஷாலே ‘ஆம்பள’ படத்தையும் தயாரிக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் நடந்துள்ள நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்திலிருந்து துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, முக்கிய கேரக்டர் ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அத்துடன் ‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’, வின்னர் உட்பட பல படங்களில் நடித்த கிரணையும் ஒரு முக்கிய கேரக்டருக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.சி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;