‘அம்புலி’, ‘ஆ’ டீமின் அடுத்த படம்!

‘அம்புலி’, ‘ஆ’ டீமின் அடுத்த படம்!

செய்திகள் 30-Aug-2014 3:00 PM IST VRC கருத்துக்கள்

‘அம்புலி 3டி’ படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி – ஹரிஷ் தற்போது இயக்கி வரும் படம் ‘ஆ’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் ரிலீஸ் வேலைகள் நடந்து வர, தங்களது அடுத்த படமாக ‘ஜம்போ 3டி’ என்ற படத்தினையும் துவங்கி விட்டார்கள். இப்படத்தை சங்கர் பிரதர்ஸ் மற்றும் எம்.எஸ்.ஜி. மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் இந்திய, ஜப்பான் கூட்டு தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தின் தொண்ணூறு சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு ஜப்பான் நாட்டில் படமாகவுள்ளது. இப்படத்தில் ‘மானாட மயிலாட’ தொலை காட்சி நிகழ்ச்சி மற்றும் 'அம்புலி', 'ஆ' ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கோகுல் நாயகனாக நடிக்க, அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பேபி ஹம்சிகா நடிக்கிறார். ஸ்ரீவித்யா இசை அமைக்க, சதீஷ். ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஆ’ படம் ரிலீசானதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆ - டிரைலர்


;