சௌந்தர்யா அஸ்வினுக்கு புதிய பதவி!

சௌந்தர்யா அஸ்வினுக்கு புதிய பதவி!

செய்திகள் 30-Aug-2014 1:32 PM IST VRC கருத்துக்கள்

‘மோஷன் கேப்சர்’ எனும் தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவின் முதல் திரைப்படம் ரஜினி நடித்த ’கோச்சடையான்’. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை பிரபல ஈராஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. உலகம் முழுக்க வெளியான இப்படத்தின் மூலம் சௌந்தர்யா அஸ்வின் திறமை மிகவும் பேசப்பட்டது. இப்போது ‘ஈராஸ்’ நிறுவனம் ஐஸ்வர்யா அஸ்வினுக்கு பெரும் பதவி ஒன்று கொடுக்க, அந்நிறுவனத்தில் முக்கிய ஒரு பொறுப்பில் இணைந்துள்ளார் ஐஸ்வர்யா அஸ்வின்! இந்நிறுவனத்தின் தலைமைக் குழுவில் ஒருவராக, கிரியேட்டிவ்-செயல்திட்ட இயக்குனராக பணியாற்ற இருக்கிறார் ஐஸ்வர்யா அஸ்வின்! இது குறித்து கருத்து தெரிவித்து ஐஸ்வர்யா பேசும்போது,
‘‘ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் பங்குபெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;