கமல் பட டைட்டிலில் சித்தார்த்!

கமல் பட டைட்டிலில் சித்தார்த்!

செய்திகள் 30-Aug-2014 11:35 AM IST VRC கருத்துக்கள்

கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘லூசியா’. இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறது சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம். இந்தப் படத்தில் ஹீரோவாக சித்தார்த் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அறிமுக இயக்குனர் பிரசாத் மாறார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏற்கெனவே இந்த பெயரில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ஒரு படம் வெளியாகியுள்ளது. அந்த படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்திருந்தது. அதனால் முறைப்படி கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்று, சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’ என்ற டைட்டிலை வைத்துள்ளனர். கமல் பட டைட்டிலில் சித்தார்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;