பிரபு தேவா வரிசையில் இடம் பிடிக்கும் தினேஷ்!

பிரபு தேவா வரிசையில் இடம் பிடிக்கும் தினேஷ்!

செய்திகள் 28-Aug-2014 3:05 PM IST VRC கருத்துக்கள்

நடன இயக்குனராக இருந்து நடிகர், இயக்குனர் என்று புரொமோஷன் பெற்றவர் பிரபு தேவா! அந்த வரிசையில் இப்போது மற்றுமொரு நடன இயக்குனர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ்! 'ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கும் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகமாகும் தினேஷ், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் நடித்த ‘பாகன்’ படத்தை தயாரித்த அஸ்லாம் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;