ரசிகர்களை ‘மிரட்ட’ வரும் ஹன்சிகா!

ரசிகர்களை ‘மிரட்ட’ வரும் ஹன்சிகா!

செய்திகள் 28-Aug-2014 1:11 PM IST Chandru கருத்துக்கள்

‘ஹன்சிகா’ என்றாலே அவருடைய வசீகரமான சிரிப்பும், அழகான உடல்வாகும்தான் ரசிகர்களுக்கு மனதில் தோன்றும். ஆனால், இயக்குனர் சுந்தர்.சி ஹன்சிகாவை வைத்து ரசிகர்களை பயமுறுத்த முடிவு செய்திருக்கிறார் தன் ‘அரண்மனை’ படத்தில். ‘ஹாரர் த்ரில்லரா’க உருவாகியிருக்கும் இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்க லக்ஷ்மிராய், சந்தானம், ஆன்ட்ரியா, சூரி, கோவை சரளா, மனோபாலா என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். விஷன் ஐ மீடியாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்கி, ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் சுந்தர்.சி. முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை கையிலெடுத்திருக்கும் சுந்தர்.சியின் ‘அரண்மனை’யில் அவருடைய வழக்கமான காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீஸரை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென யாருக்கும் தெரியப்படுத்தாமல் வெளியிட, பின்னர் இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க அது ‘யு&டியூப்’பிலிருந்து நீக்கப்பட்டது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை இன்னும் சில தினங்களில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் ‘அரண்மனை’ டீம், படத்தை செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;