ஓணம் பண்டிகைக்கு விஜய் – அம்லா பால் உதவி!

ஓணம் பண்டிகைக்கு விஜய் – அம்லா பால் உதவி!

செய்திகள் 28-Aug-2014 12:42 PM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சம்பந்தமாக கேரளா, கொச்சி சென்றுள்ளார் விஜய். விஜய்யுடன் தனது மனைவியும், நடிகையுமான அமலா பாலும் கொச்சி சென்றுள்ளார். கொச்சி அருகே உள்ள ஆலுவா என்ற இடம் தான் அமலா பாலின் சொந்த ஊர்! அமலா பால் நடிகையாகி பிரபலமான பிறகு அந்த ஊரில் இருக்கும் அரசாங்க பொது மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நலிந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது அவரது வழக்கமாம்! அடுத்த மாதம் 7-ஆம் தேதி கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளனர் விஜய் – அமலா பால்! . இதற்காக அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, கனிகள் அடங்கிய ஒரு ‘கிஃப்ட் கிட்’ மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக பணம் ஆகியவற்றை வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி அந்த மருத்துவமனையில் நாளை மறுநாள் (30-8-14) நடைபெறவிருக்கிறது. தனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டும் அந்த மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு அமலாபால் நிதி உதவிகளை செய்திருந்தராம்! விஜய், அமலா பால் தங்களது திருமணத்தை முன்னிட்டு யாரும் தங்களுக்கு பரிசுகள் தரவேண்டாம், எதாவது தரவேண்டும் என்று நினைத்தால் அதை பணமாக தாருங்கள், அதை ஏழை எளியோருக்கு உதவிட பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கூட்டாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;