நடிகரான தயாரிப்பாளர் டி.சிவா!

நடிகரான தயாரிப்பாளர் டி.சிவா!

செய்திகள் 28-Aug-2014 11:26 AM IST VRC கருத்துக்கள்

திரைப்பட தயாரிப்பாளர்களும் தற்போது நடிகர்களாக மாறி படங்களில் நடித்து வரும் சீஸன் இது. சமீபத்தில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் கதாநாயகி அமலா பாலின் தந்தையாக நடித்திருந்தார் ‘ஆடுகளம்’, ‘நய்யாண்டி’, ‘ஜிகர்தண்டா’ முதற்கொண்ட படங்களை தயாரித்த ‘குரூப் கம்பெனி’ அதிபர் எஸ்.கதிரேசன்! இவரை தொடர்ந்து மற்றுமொரு தயாரிப்பாளர் நடிகராகிறார்! அவர் வேறு யாருமல்ல; விஜயகாந்த் நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’, முரளி நடித்த ‘சாமி போட்ட முடிச்சு’ , கார்த்திக் நடித்த ‘தெய்வ வாக்கு’, சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ உட்பட பல படங்களை தயாரித்த ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தான்! சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜீவா’ படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவின் தந்தையாக நடிக்கிறார் டி.சிவா. ‘ஜீவா’ படத்தின் மூலம் நடிகராகவும் சினிமாவில் களம் இறங்கும் டி.சிவா, தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;