’பூஜை’க்காக புதிய நிறுவனத்தை துவங்கிய விஷால்!

’பூஜை’க்காக புதிய நிறுவனத்தை துவங்கிய விஷால்!

செய்திகள் 28-Aug-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, அதன் சார்பில் தான் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் விஷால், அடுத்து ‘விஷால் சவுண்ட் ஃபேக்டரி’ என்ற பெயரில் ஆடியோ கம்பெனி ஒன்றையும் துவங்கவிருக்கிறார். இந்த கம்பெனியின் முதல் வெளியீடாக விஷால் தற்போது நடித்து, தயாரித்து வரும் ‘பூஜை’ படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார். ஹரி இயக்கி வரும் ‘பூஜை’ படத்தில் விஷால் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வரும் ‘பூஜை’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் விஷால். நடிகர் தனுஷை தொடர்ந்து இப்போது நடிகர் விஷாலும் ஆடியோ கம்பெனியை துவங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;