ஜாக்கி சானுடன் கைகோர்க்கும் ஷாரூக்கான்!

ஜாக்கி சானுடன் கைகோர்க்கும் ஷாரூக்கான்!

செய்திகள் 28-Aug-2014 10:51 AM IST Chandru கருத்துக்கள்

‘பாலிவுட் பாஷா’ ஷாரூக்கானுக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்திருக்கிறது. சர்வதேச குற்றத்தடுப்பு காவல்துறை அமைப்பான ‘இன்டர்போலி’ன் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஷாரூக். இதில் சிறப்பு என்னவென்றால், ‘இன்டர்போல்’ காவல்துறையுடன் கைகோர்க்கும் முதல் இந்திய பிரபலம் ஷாரூக்கான்தானாம். சமூகத்தில் நடைபெறும் குற்றங்களிலிருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, சட்டத்தை எப்படி மதித்து நடப்பது என்பன போன்ற விழிப்புணர்வுகளை உலக முழுக்க இருக்கும் குடிமக்கள் தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இனி ஷாரூக்கும் ஈடுபடுவாராம்.

இந்த ‘இன்டர்போலி’ல் ஏற்கெனவே ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கி சான், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் பெர்னான்டோ அலான்ஸோ ஆகியோர் தூதராக பங்கு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - Happy New Year பாடல் மேக்கிங்


;