அர்னால்டை அசத்திய ‘ஐ’ விக்ரம்!

அர்னால்டை அசத்திய ‘ஐ’ விக்ரம்!

செய்திகள் 28-Aug-2014 10:21 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தைப் பற்றிய பேச்சுதான் இப்போது ஊரெல்லாம் நடந்து வருகிறது. அதுவும், ஆடியோ விழாவிற்கு ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு வருகிறார் என்பது உறுதியானதும், இன்னும் அதிகமாக ‘ஐ’ படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அர்னால்டின் வீட்டிற்குச் சென்று ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அவரை அழைப்பதற்காக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு சென்றிருந்தார். அவரை அழைத்து உபசரித்து விழாவிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அர்னால்டு ‘ஐ’ படம் பற்றியும் சிலாகித்துப் பேசினாராம். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக ‘ஐ’ படம் உருவாகி வருவதாக தான் கேள்விப்பட்டதாகவும், குறிப்பாக ஹீரோ விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் வியந்து பேசினாராம்.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக இடத்தை தேர்வு செய்து கொண்டிருக்கிறதாம் ‘ஐ’ படக்குழு. பாடல்களோடு, ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரும் அந்த விழாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;