டப்பிங்கில் ‘வை ராஜா வை’

டப்பிங்கில் ‘வை ராஜா வை’

செய்திகள் 28-Aug-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

'3' படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ’வை ராஜா வை’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று முதல் விறுவிறுப்பாக நடைபெறவிருக்கிறது. கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்துடன் டேனியல் பாலாஜி, விவேக், சதீஷ், வசந்த், போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷின் ஃபேவரிட் இசை அமைப்பாளரான அனிருத்தை தவிர்த்து இப்படத்தின் மூலம் முதன் முதலாக யுவனுடன் இணைந்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்! இதுவொரு ‘ஏஜிஎஸ்’ நிறுவன தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;