‘லிங்கா’வுக்கு எதிர்ப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்

‘லிங்கா’வுக்கு எதிர்ப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்

செய்திகள் 28-Aug-2014 10:03 AM IST Chandru கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படம் தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா, ஜோக் அருவி, லிங்கனமக்கி அணை ஆகிய இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘லிங்கா’ படப்பிடிப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எனக்கூறி, படத்தை தடைசெய்ய மக்கள் போராடி வருகிறார்கள் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்தச் செய்திகளை மறுத்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராக்லைன் வெங்கடேஷ். அதாவது, ரஜினியைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினந்தோறும் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவதாகவும், ஆனால், ஷூட்டிங் தடைபடும் என்பதால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுவதால், அவர்கள் வெளியே சென்று இவ்வாறு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அதோடு, ‘லிங்கா’ படத்திற்காக கர்நாடக அரசின் முறையான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும், எந்தவித தடையுமின்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மேலும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.

நாளை ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளிவரவிருக்கிறது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;