ஆகஸ்ட் 31-க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

ஆகஸ்ட் 31-க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

செய்திகள் 27-Aug-2014 5:47 PM IST Chandru கருத்துக்கள்

தங்கள் ‘தல’ எத்தனை ‘ஹிட்’ கொடுத்திருந்தாலும், அது எல்லாவற்றையும்விட ‘மங்காத்தா’வின் வெற்றியையே பெரிதாகக் கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். சும்மாவா.... ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் விநாயக் மகாதேவனாக ‘மங்காத்தா’வில் மிரட்டினாரே அஜித்! ‘மணி... மணி....’ என்றும் ‘நானும் எத்தனை நாளைக்குதான் நல்லவனாவே நடிக்கிறது’ எனவும் தல பேசிய ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் எழுந்த விசில் சப்தம் காதைக் கிழித்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜாவின் மாஸ் பின்னணி இசையில் உருவான ‘மங்காத்தா’ படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ‘மங்காத்தா’ வெளியான நாளை கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். ‘மங்காத்தா டே’ என ட்விட்டரில் ட்ரென்ட் செட் செய்ய மொத்த இணையதள அஜித் ரசிகர்களையும் இணைக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். அதோடு இயக்குனர் வெங்கட் பிரபுவும் தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இன்னும் 3 நாளில் ‘மங்காத்தா’ வெளியான தினம் என செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அன்றைய தினம் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் எங்கு பார்த்தாலும் ‘மங்காத்தா டா....’ என்பதே நீக்கமற நிறைந்திருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;