‘ஐ’ விழாவில் அர்னால்டு கலந்துகொள்வது உறுதி!

‘ஐ’ விழாவில் அர்னால்டு கலந்துகொள்வது உறுதி!

செய்திகள் 27-Aug-2014 3:13 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிரார் என்பது உறுதியாகிவிட்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் ‘ஐ; படத்தை இணைந்து தயாரித்து வரும் ரமேஷ் பாபு சமீபத்தில் அமெரிக்கா சென்று அர்னால்டை சந்தித்து ‘ஐ’ பட விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ரமேஷ் பாபுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அர்னால்டு ‘ஐ’ பட விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக ரமேஷ் பாபு அமெரிக்காவில் அர்னால்டுடன் எடுத்துக் கொண்ட புடைப்படத்தை வெளியிட்டிருப்பதோடு, ஆஸ்கார்ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். ’ஐ’ படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இன்னொரு ஹாலிவுட் பிரபலமான ஜாக்கிசான் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;