‘கிஸ்’ அவங்களுக்கு ‘கிசு கிசு’ எங்களுக்கா? - சிவகார்த்திகேயன்

‘கிஸ்’ அவங்களுக்கு ‘கிசு கிசு’ எங்களுக்கா? - சிவகார்த்திகேயன்

செய்திகள் 27-Aug-2014 1:54 PM IST Chandru கருத்துக்கள்

சினிமா நிகழ்ச்சிகளில் அவ்வப்போது எதையாவது ஏடாகூடமாக செய்து விழாவுக்கு வந்தவர்களை பீதியடைய வைப்பது வாடிக்கை. சமீபத்தில் நடந்து முடிந்த ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு விருது வழங்கிய நடிகை பூஜா, தனக்கு ஒரு முத்தம் தரும்படி சந்தோஷ் நாராயணனிடம் கேட்டு அவரை நெளிய வைத்தார். அவர் தர மறுத்ததும், பூஜாவே முத்தம் கொடுப்பதற்காக அவர் பக்கத்தில் செல்ல, தலை தெறிக்க மேடையிலிருந்து கீழே ஓடினார் சந்தோஷ் நாராயணன்.

இதேபோன்றதொரு சம்பவம் இன்று காலை நடந்து முடிந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசை வெளியீட்டு விழாவிலும் நடந்தது. நிகழ்ச்சியின்போது மைக் பிடித்து பேசிய நடிகை ப்ரியா ஆனந்த், ‘‘எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. இமான் சார் கன்னத்தைப் பிடிச்சு கிள்ளிப் பார்க்கணும்’’ எனக்கூறிவிட்டு விறுவிறுவென இசையமைப்பாளர் டி.இமான் அருகே சென்றவர், அவருடைய கன்னத்தை செல்லமாக பிடித்து, ‘‘என் அம்முக் குட்டி, புச்சுக்குட்டி, செல்லக் கன்னம்’’ என கொஞ்சித் தள்ளிவிட்டார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசியபோது, ‘‘நான் காம்பியரா இருந்த காலத்துல இப்படிதான் நடக்கும். அப்போ என்னை எல்லோரும் கலாய்ப்பாங்க. அவங்களுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள்தான் பதில். அது என்னபா... எல்லா நடிகைங்களும் இசையமைப்பாளர்கள் கன்னத்தையே பிடிச்சு கிள்றாங்க. முத்தம் கொடுங்கிறாங்க. ஆனா, நடிகைகள்கூட சேர்த்து வச்சு ஹீரோக்கள் எங்களைப் பத்திதான் கிசுகிசு எழுதுறாங்க’’ என காமெடி செய்ய, மொத்த அரங்கமும் சிரிப்பில் குலுங்கியது. தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘சின்ன சின்ன கிராமத்துல இருக்கிற பசங்கூட என்னைப் பார்த்ததும் ‘டேய் அங்க பாருடா... ஊதா கலரு ரிப்பன் மாமா’ன்னுதான் கூப்பிடுறாங்க. அதுக்குக் காரணம் இமான் சாரோட மியூசிக்தான்!’’ என இசையமைப்பாளரையும் புகழ்ந்துவிட்டுப் போனார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும்போதும், ‘‘என்னைக்கூட ‘கூடை மேல கூடை வச்சு’ பாட்டுல நடிச்சவர்னுதான் பலபேருக்கு அடையாளம் தெரியுது. அந்தளவுக்கு அவர் பாட்டு எல்லா மக்கள்கிட்டயும் ரீச் ஆயிருக்கு!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;