‘அனேகன்’ டப்பிங்கில் தனுஷ்!

‘அனேகன்’ டப்பிங்கில் தனுஷ்!

செய்திகள் 27-Aug-2014 11:48 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ ஹிட்டுக்கு அடுத்து தனுஷ் நடிப்பில் ரிலீசாகவிருக்கும் படம் ’அனேகன்’. கே.வி.ஆனந்த் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது என்றும், படத்தை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் ‘அனேகன்’ டீம் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனராம். இந்தப் படத்துடன் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ ஹிந்திப் படத்திலும் நடித்து வரும் தனுஷ், ‘அனேகன்’ படத்திற்கான டப்பிங் வேலையை துவங்கி விட்டாராம்! ’ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஆமீரா தஸ்தர் நடித்திருக்க, முக்கிய கேரக்டர் ஒன்றில் கார்த்திக்கும் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவரும் படம், கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;