‘விஸ்வரூபம் 2’வுக்கு ரிலீஸ் தேதி ரெடி!

‘விஸ்வரூபம் 2’வுக்கு ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 27-Aug-2014 11:43 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று முதல் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது... ‘உத்தமவில்லன்’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஆனால், தாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளிவரும் என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் ‘உலகநாயகனின்’ ரசிக கண்மணிகள்! தற்போது, அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது.

அதாவது, ‘ஐ’ படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேட்டியளித்தபோது, ‘விஸ்வரூபம் 2’ படத்தைப் பற்றியும் செய்தியாளர்கள் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘‘விஸ்வரூபம் 2 படம் தற்போது கிராபிக்ஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறது. இப்படம் ஆக்ஷன் மட்டுமின்றி நட்பு, பாசம், டான்ஸ், ஃபைட் என எல்லா கலவையும் கலந்த படமாக இருக்கும். மீண்டும் ஒரு ‘சகலகலா வல்லவன்’ படம் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும். ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியானபிறகு அதற்கு அடுத்த மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்!’’ என்று கூறியிருக்கிறாராம்.

ஆக... ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவரி’ன் தரிசனம் நவம்பரில் நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;