சென்னை, அமெரிக்காவில் ‘மானே தேனே பேயே’

சென்னை, அமெரிக்காவில்  ‘மானே தேனே பேயே’

செய்திகள் 27-Aug-2014 11:39 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி. பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா நடிக்க, மணிநாகராஜ் இயக்கத்தில் ‘பென்சில்’ என்ற படத்தை தயாரித்து வரும் 'கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட்' பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘மானே தேனே பேயே’. இந்தப் படத்தில் ஆரி கதாநயாகனாக நடிக்கிறார். ‘நெடுஞ்சாலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறும்போது, ‘‘ ஏற்கெனவே நான் இயக்கிய ‘சில்லுனு ஒரு காதல்’ படம் காதல் கலந்த குடும்பப் படமாக அமைந்திருந்தது. ‘நெடுஞ்சாலை’ படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள். ஆனால் ‘மானே தேனே பேயே’ அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக இருக்கும். காதலை கலந்து காமெடியாக படம் செல்லும். இந்தப் படத்திற்காக சத்யா இசையில், கானாபாலா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவானது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி தொடர்ந்து அமெரிக்காவிலும் நடைபெறவிருக்கிறது. இப்படம் இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ற படமாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;