‘நடன சூறாவளி சூரி’ பராக்.... பராக்!

‘நடன சூறாவளி சூரி’ பராக்.... பராக்!

செய்திகள் 27-Aug-2014 11:35 AM IST Chandru கருத்துக்கள்

அஜித், விஷால், சிம்பு என ஹீரோக்கள் தங்கள் பட்டங்களை ஒருபுறம் துறந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் காமெடி நடிகர்களுக்கு பட்டம் சூட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. ‘சேட்டை’ படத்தின் ரிலீஸின்போது சந்தானத்திற்கு ‘காமெடி சூப்பர்ஸ்டார்’ பட்டத்தை வழங்கியது ‘யுடிவி’ நிறுவனம். அதன் பிறகு, சிம்பு தனக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்த ‘யங் சூப்பர்ஸ்டார் பட்ட’த்தை தனக்குத்தானே சூட்டிக்கொண்டார் பிரேம்ஜி அமரன். இப்போது.... இது சூரி டைம்....

இன்று காலை நடந்து முடிந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மனோபாலா, ‘‘நாங்கெல்லாம் சூரி ஆடின ஆட்டத்தைப் பார்த்து அசந்து போயிட்டோம். அதனால நாங்க எல்லோரும் சேர்ந்து அவருக்கு ‘நடன சூறாவளி’ங்கிற பட்டத்தை வழங்குறோம். இந்தப் படத்துல விமல் கூட சேர்ந்து அவர் போட்டிருக்கிற ஆட்டம் இதுக்கு முந்தின படங்கள்ல அவர் ஆடியதையெல்லாம் தூக்கி சாப்பிட்டிருச்சு’’ எனக் கூறியுள்ளார்.

வாங்க... ‘நடன சூறாவளி சூரி’...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;