உதவி இயக்குனர் கதாநாயகன் ஆனார்!

உதவி இயக்குனர் கதாநாயகன் ஆனார்!

செய்திகள் 27-Aug-2014 11:14 AM IST VRC கருத்துக்கள்

‘கபி & அபி சித்திரக்கண்கள்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ' நனையாத மழையே' என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கெனவே கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கும் ‘49 – ஓ' படத்தில் நடித்தவராவார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மகேந்திரபூபதி. படம் குறித்து மகேந்திரபூபதி கூறும்போது, ‘‘ காதல் என்பது இன்று இல்லை என்றுமே நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போன விஷயம். காதல் சாவதற்காக அல்ல. சாகும்வரை வாழ்வதற்கே என்கிற ஒன்றே முக்கால் அடி திருக்குறள் மாதிரியான வரிகளை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளோம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;