‘பாணா காத்தாடி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’ படங்களைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கிறது ‘இரும்பு குதிரை’ திரைப்படம். அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் ‘ஏழாம் அறிவு’ புகழ் ஜானி ட்ரி நியூயன், ராய் லக்ஷ்மி, அலிஷா அப்துல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் யுவராஜ் போஸ். இசை ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் டி.எஸ்.சுரேஷ்.
பைக் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘இரும்பு குதிரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வெளிவந்த ஜீ.வி.யின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், கேட்கும் ரகத்தில் இடம்பிடித்திருக்கின்றன. படம் வெளிவந்த பிறகு எடிட்டிங்கும், ஒளிப்பதிவும் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.
பீட்சா டெலிவரி பாயாக வேலைசெய்யும் அதர்வாவுக்கும், கஸ்டமராக அறிமுகமாகும் ப்ரியா ஆன்ந்துக்கும் காதல் ஏற்படுகிறது. சாதாரண பைக் ஒன்றை வைத்திருக்கும் அதர்வா, ரொம்பவும் நிதானமாக பொறுமையாக பயணம் செய்து பீட்சாவை எப்போதும் லேட்டாகவே டெலிவரி செய்வாராம். இந்நிலையில், அதி வேக ரேஸ் பைக் ஒன்றை வாங்க ஆசைப்படுகிறார் அதர்வா. அதன்பிறகு அவருடைய ‘லைஃப்’பில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்களாம். அதர்வாவின் தோழியாக லக்ஷ்மி ராயும், நண்பனாக ‘நண்டு’ ஜெகனும் நடித்திருக்கிறார்கள். அதர்வாவின் அக்காவாக தேவதர்ஷினி நடித்திருக்கிறார். அதோடு, இப்படத்தில் நிஜ பைக் ரேஸரான அலிஷா அப்துல்லாவும் நடித்திருப்பதால் கண்டிப்பாக பைக் ரேஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கும் என்கிறார்கள். கூடவே, வெளிநாட்டு நடிகர் ஜானி நியூ ட்ரியனின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுமாம்.
பைக் ரேஸை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அதில் காதல், நட்பு, பாசம், சமூக விழிப்புணர்வு போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ் போஸ்.
‘ஃபிப்ரவரி-14’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த்,...
தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’...
தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’...