ஓநாய் மனிதராக ‘ஐ’ விக்ரம்? ‘ஸ்டில்’லில் கசிந்தது உண்மை!

ஓநாய் மனிதராக ‘ஐ’ விக்ரம்? ‘ஸ்டில்’லில் கசிந்தது உண்மை!

செய்திகள் 26-Aug-2014 4:22 PM IST Chandru கருத்துக்கள்

நாளுக்கு நாள் ‘ஐ’ பற்றி வெளிவரும் செய்திகளால் ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து கிழிந்துவிடும்போல... லேட்டஸ்ட் நியூஸ் இப்படத்தின் ஆடியோ விழா வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறப்போகிறது, அதில் ஜாக்கி சான், அர்னால்ட் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதுதான். அதோடு இப்படத்தை உலகமெங்கும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளிலும், சீனாவில் மட்டும் மிகப்பெரிய அளவில் வெளியிடப்போவதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறாராம். ஆனால், விஷயம் இதுவல்ல.... இப்படத்திற்காக விக்ரம் போட்டிருக்கும் ‘கெட்அப்’ பற்றிய செய்தி ஒன்று தற்போது கசிந்திருக்கிறது.

அதாவது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தைப் பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘‘இப்படத்தில் விக்ரம் பலவித தோற்றங்களில் வருகிறார். அதில் ஓநாய் மனிதராக ஒரு கெட்அப்பில் நடிக்கிறார். இந்தத் தோற்றத்திற்காக 70 கிலோ எடையிலிருந்து 120 கிலோ எடைக்கு உயர்ந்து, பின்னர் 50 கிலோவாக எடையைக் குறைத்து கடுமையாக உழைத்திருக்கிறார்!’’ என்று கூறியிருக்கிறாராம்.

தயாரிப்பாளர் சொன்ன இந்த ‘ஓநாய் மனிதன்’ கெட்அப்பிற்கான ஸ்டில் நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. ஆனால், அதில் மேக்அப் மேனின் உருவமும், விக்ரமின் ‘ஓநாய் மனிதன்’ கெட்அப் பெருவிரல் மட்டுமே தெரிந்திருப்பதால் அவ்வளவாக அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தயாரிப்பாளர் கூறியதையும், ஸ்டில்லையும் வைத்துப் பார்க்கும்போது ‘ஓநாய் மனிதரா’க விக்ரம் நடித்திருப்பது 100% உண்மையாகியிருக்கிறது.

அதோடு, இப்படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர்கள் சுபா லேட்டஸ்டாக ‘ஐ’ பற்றிய ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள். அதில் ‘‘ஐ என்றால் என்ன? சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி விளக்கம்: வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன்,. அரசன், ஆசான், தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம். திரு ஷங்கர் படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு இதில் எதைக் குறிக்கிறது என்பதை விட எவற்றைக் குறிக்கிறது என்று படம் வந்ததும் அறியலாம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, ஏதோ ஒரு நச்சு பானம் ஒன்றை விக்ரம் குடிக்க, அதனால் ‘ஓநாய் மனிதரா’க விக்ரம் மாறுவதுபோல் கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது.

‘ஓநாய் மனிதனா’க விக்ரமைப் பார்க்க தீபாவளி வரை நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;